அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை நாய்களைப்போல சுட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பேச்சுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  கேரளா , மேற்கு வங்கம்  , உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

அது மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் .  பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது ,  சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அதனால்  சில இடங்களில் பொது  சொத்துக்களும் சேதபடுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் பேசிய மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் ,  உத்தரப் பிரதேசம் ,  அசாம்  , கர்நாடகா போன்ற பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பொதுச்  சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை  தங்களது அரசு நாய்களை போல சுட்டுக் கொல்ல கூட தயங்காது எனக்கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அவரே இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்துவருகின்றனர்.

 

இந்நிலையில்  அவரின் பேச்சை வன்மையாக கண்டித்துள்ள  மம்தா பானர்ஜி இது மிகவும் வெட்கக்கேடானது ,  எப்படி ஒரு அரசியல் தலைவர் இப்போது பேசலாம்.?  போராட்டக்காரர்களை சுட்டு கொல்லுவதற்கு மேற்குவங்கம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் அல்ல போராடுபவர்களை கொல்ல  விரும்புகிறதா பாஜக என்றும் கேள்வி எழுப்பினார் .  இதற்கிடையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய  அம்மாநில அமைச்சர் ரகுநாத் சிங் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக பேசுபவர்களை உயிரோடு கொன்று புதைப்பேன்  என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.