மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசினால் உடனே பாகிஸ்தானியர் என்று முத்திரை குத்துவதை  பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது என மேற்கு வங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.   இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது .  போராட்டத்தை  கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர் .  இந்நிலையில் டெல்லி தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் அங்குள்ள மாணவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக அமைப்புகள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளன.   இந்த தாக்குதல் குறித்து முதல்கட்ட தகவலின்படி ஏஎஸ்எப் மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர்களை ஏபிவிபி அமைப்பைச்  சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது .  இந்நிலையில்  இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.  தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள்  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மாணவர்களின் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும்  மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.   இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தா பானர்ஜி,   மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் மிகவும் கவலைக்குரியது. 

இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட ஆபத்தான தாக்குதல் ,  பாஜகவுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லோரும் பாகிஸ்தானியர்கள் என்றும் ,  நாட்டின் எதிரிகள் என்றும்  முத்திரை குத்தப்படுகிறார்கள் .  இதற்கு முன் நாடும் நாட்டு மக்களும்  இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சந்தித்ததே இல்லை ,  டெல்லி காவல்துறை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் இல்லை .  அது  மத்திய அரசின் கையில் உள்ளது.  ஒருபுறம் கலவரம் செய்ய அவர்கள்  பாஜகவின் குண்டர்களை அனுப்பியுள்ளனர் .  மறுபுறம் காவல்துறையை செயல்பட முடியாமல் ஆக்கியுள்ளனர்.  இது பாசிசத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என அப்போது  அவர் தெரிவித்துள்ளார்.