அடுத்தடுத்த ஆடியோக்களை பகிர்ந்து வருவதால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரத்தில் சசிகலாவை வசைபாடி வருகின்றனர்.

சசிகலா அதிமுகவை கைப்பற்ற தினமும் ஒரு ஆடியோ வெளியிட்டு வரும் நிலையில் அவர் கட்சியில்லை. கட்சியிலும் சேர்க்கமாட்டோம் என மாவட்டந்தோறும் ஓ.பி.எஸ்- எடப்பாடி ஆதரவாளர்கள் கண்ட தீர்மானம் போட்டு வருகின்றனர். ஆனாலும் சசிகலா அசரவில்லை. அடுத்தடுத்த ஆடியோக்களை பகிர்ந்து வருவதால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரத்தில் சசிகலாவை வசைபாடி வருகின்றனர்.

ஒரு காலத்தில் அ.தி.மு.க-வில் நிழல் அதிகாரமாகத் திகழ்ந்தவர் திகழ்ந்தவர் சசிகலா. அந்தக் கட்சியின் ஒவ்வொரு அசைவும் சசிகலா விருப்பப்படியே நடந்தது. அ.தி.மு.க ஆட்சியில், சசிகலாதான் நிழல் முதலமைச்சராக இருந்தார். அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் நம்பர் 2-வாக இருந்த சசிகலாதான் நம்பர் 1. அந்தக் காலத்தில் சசிகலாவை நேரில் பார்த்தவர்களும், அவர் குரலைக் கேட்டவர்கள் கூட மிக அரிதாகவே இருந்தனர். சசிகலா அப்படி சீக்ரெட்டாக இருந்து, அந்தக் கட்சியை ஆட்டிப்படைத்த காலத்தில், அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் முதல் அமைச்சர்கள் வரை சசிகலா பெயரைக் கேட்டால், நடுங்குவார்கள்.

ஆனால், ஜெயலலிதா இறந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்று, அ.தி.மு.க-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு, சசிகலாவின் பிம்பம் சுக்குநூறானது. அதை மற்றவர்கள் சிதைத்ததைவிட அதிகமாக, சசிகலாவே சிதைத்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முயற்சியில், அவர் வெளியிடும் தொலைபேசி உரையாடல்கள், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என சிரிக்கும், முன்னால் அமைச்சர்கள், பா.ஜ.க தலைமையோடு பேசி, சசிகலாவை முழுமையாக அடக்கும் வேலையைத் தொடங்கி உள்ளனர். 

அதற்கான பலன் பா.ஜ.க தலைமையிடம் இருந்தும் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. சசிகலா தீவிரமாக எதையாவது செய்ய முயற்சித்தால், ஒரு நாளைக்கு ஒரு பழைய வழக்கை தூசி தட்டவும், புதியதாக நிறைய வழக்குகளைப் போடவும், திட்டம் தயாராகி உள்ளது. இந்தத் தகவலும் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் அசராமல் அடித்து ஆடும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா.