நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை அசோக்நகரில் நடைபெற்றது.

அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்,தினகரன் ,  அக்கட்சியின்  நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டக்கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிடிவி தினகரன்,  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருவதைக் காட்டுகிறது என குற்றம் சாட்டினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் என்றும் தினகரன் தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல் திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அமோக வெற்றிபெறும் என்று தினகரன் அதிரடியாக தெரிவித்தார்..

அது மட்மல்ல  இனி வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிகளிலும்  அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகம் வெற்றி பெரும் என்றும் தினகரன் சுறினார்.