We will overthrow in a week - TTV

எடப்பாடி பழனிசாமி ஆட்சி, அடுத்தவாரம் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் தம்மை முதலமைச்சராக்கிய எம்.எல்.ஏ.க்களையே அவர் மிரட்டுகிறார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சி, அடுத்தவாரம் வீட்டுக்கு அனுப்பப்படும். தம்மை முதலமைச்சராக்கிய எம்.எல்.ஏ.க்களையே அவர் மிரட்டுகிறார்.

தமிழகத்தில் அடுத்த வாரத்துக்குள் ஆட்சி அகன்றுவிடும். இந்த ஆட்சி போக வேண்டும். மீண்டும் தேர்தல் வர வேண்டும். எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆளுநருக்காக 3 வாரங்கள் காத்திருந்தோம். வேறு வழியில்லாமல் நீதிமன்றத்துக்கு சென்றோம். முதலமைச்சர் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அமைதி காத்தார்.

பெரும்பான்மையை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி எங்களை மிரட்டி, உருட்டி பார்க்கிறார். யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகமிழைத்து மிரட்டிப் பார்க்கிறார்.

திமுகவுடன் எங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை. எதிர்கட்சியான திமுக அதன் வேலையை செய்து வருகிறது. திமுக தொடர்ந்த வழக்கில் எங்களைச் சேர்த்துக் கொண்டது எதார்த்தமானது. இது கூட்டணி அல்ல. உயர்நீதிமன்றத்தில் மனு போட்டதன் மூலம் ஸ்டாலின் எங்களுக்கு உதவி செய்துள்ளார்.