Asianet News TamilAsianet News Tamil

எங்கே போனாலும் விடமாட்டோம்... உதயநிதிக்கு கேட் போடும் பாஜக..! ​

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதிக்கு அதிமுக டஃப் கொடுக்க முடிவு செய்து இருக்கிறதோ இல்லையோ பாஜக பதம் பார்க்க முடிவு செய்து இருக்கிறது. 

We will not leave wherever we go ... BJP will put a gate for Udayanidhi
Author
Tamil Nadu, First Published Feb 26, 2021, 4:24 PM IST

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதிக்கு அதிமுக டஃப் கொடுக்க முடிவு செய்து இருக்கிறதோ இல்லையோ பாஜக பதம் பார்க்க முடிவு செய்து இருக்கிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.We will not leave wherever we go ... BJP will put a gate for Udayanidhi

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் வரலாற்றில் பேசப்படும் தொகுதி. 1977 முதல் இந்த தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1991 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார். தி.மு.க.வுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார்.We will not leave wherever we go ... BJP will put a gate for Udayanidhi

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ஜனதா சார்பில் குஷ்பு களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார். இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, ’’இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேனா? என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உதயநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டால் சந்தோஷம்’’ என்றார்.We will not leave wherever we go ... BJP will put a gate for Udayanidhi

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தொகுதி மட்டும் நட்சத்திர அந்தஸ்தை பெறுவது தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. குஷ்பு, உதயநிதி இருவரும் நட்சத்திர பிரபலங்கள், இருவரும் தங்கள் தொகுதியில் போட்டியிடுவதை நினைத்து தொகுதி மக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். திரையிலும், டி.வி.யிலும் பார்த்த இருவரும் தங்கள் தெருக்களிலும், வீடு வீடாகவும் வருவதால் தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். குஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கி வருகிறார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிட்டால் அங்கு குஷ்புவையும், உதயநிதிஆயிரம் விளக்கு அல்லது சைதாப்பேட்டையில் போட்டியிட்டால் அங்கு காயத்ரி ரகுராமையிம் களமிக்க திட்டமிட்டுள்ளது பாஜக. 

Follow Us:
Download App:
  • android
  • ios