இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்த தலைவர்களை கவுரவப்படுத்தும் நாளாக இது இருக்கட்டும் எனவும், தான் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை யானை மீது ஊர்வலமாக கொண்டு சென்ற புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்திய தேசத்தையே வழிநடத்தும் அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தின கொண்டாட்டம்  பாஜக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆறாவது ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் அதை கொண்டாடியுள்ளார். 2019 ஆம் ஆண்டில், இந்த நாளைக் கொண்டாட பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக நாங்கள் கொண்டாடத் தொடங்கினோம். 

அப்போதிலிருந்து இந்தியா முழுவதும் மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது நமது அரசியல் அமைப்பை உருவாக்கி தந்த நம் தலைவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதற்கும், அவர்கள் கண்ட கனவு இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு நாளாக இது இருக்கும். முதலாவது வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியலமைப்பு தின நிகழ்வில் இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துக்கள், நமது அரசியலமைப்பை பற்றி மேலும் அறிய இந்நாள் உங்களை ஊக்குவிக்கட்டும். 

கடந்த 2010ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 60 ஆண்டுகளைக் குறிக்கும், வகையில் குஜராத்தில் சுரேந்திர நகரில் சம்விதன் கௌரவம் என்ற யாத்திரையை ஏற்பாடு செய்தோம், அதில் அரசியலமைப்பின் பிரதியை யானையின் மீது வைத்து அது நகரில் பல பகுதிகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த  ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன், இது ஒரு தனித்துவமான அஞ்சலி என பிரதமர் மோடி அதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.