Asianet News TamilAsianet News Tamil

குருவின் மகன் அவனது தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் உதவி செய்ய தயார்... வாய்ப்பு கொடுக்கும் ராமதாஸ்

குருவின் மகன் கனலரசன் திருந்தி வந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணியும்  காத்திருப்பதாக குருவின் மூத்த மைத்துனரிடம் சத்தியம் செய்ததாக என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

we will help Kaduvetti Guru son Kanalarasan
Author
Thailapuram, First Published Mar 2, 2019, 11:41 AM IST

ஒருவேளை குருவின் மகன் கனலரசன் அவனது தவறுகளை உணர்ந்து திருந்திவந்து உங்களிடம் தஞ்சமடைந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணியும்  காத்திருப்பதாக குருவின் மூத்த மைத்துனரிடம் சத்தியம் செய்ததாக என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மறைந்த மாவீரன் குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவருமான கருணாகரன் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது மாவீரன் குரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் குறித்து நிறைய விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

we will help Kaduvetti Guru son Kanalarasan

குரு மீது மரியாதையும், அவரது குடும்பத்தினர் மீது அக்கறையும் கொண்டுள்ள பொறியாளர் கருணாகரன், என்னிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். மாவீரன் குருவின் மகன் கனலரசனை சீரழித்துவிட்டதாகவும், தமக்கு எதிராக பின்னப்படும் சதி வலையை அவனே உணர்ந்து திருந்தாதபட்சத்தில், அவனையும், அவனது எதிர்காலத்தையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் வேதனைப்பட்டார். ஒருவேளை கனலரசன் அவனது தவறுகளை உணர்ந்து திருந்திவந்து உங்களிடம் தஞ்சமடைந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

we will help Kaduvetti Guru son Kanalarasan

அதைக்கேட்ட நான், மாவீரன் குருவின் மகன்மீது நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்தேன். மாவீரன் குருவின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் கனலரசனை மருத்துவர் அன்புமணி இராமதாசு அழைத்து, அவனது கல்வி மற்றும் எதிர்காலம்  குறித்து 2 மணி நேரம் பேசியதாகவும், மாவீரன் குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிறப்பாக படித்து மருத்துவராக ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தேன். கனலரசன் திருந்தி வந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் காத்திருப்பதாகவும் கருணாகரனிடம் உறுதியளித்தேன்.

அதற்காக எனக்கு நன்றி தெரிவித்த மாவீரன் குருவின் மைத்துனரான பொறியாளர் கருணாகரன், கலங்கிய கண்களுடன் என்னிடம் விடைபெற்றுச் சென்றார். இவ்வாறு கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios