அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் வீழ்த்துவோம்... எடப்பாடி பழனிசாமி அதிரடி!!
உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்தபோது பல்வேறு சூழ்நிலைகளில் பொறுப்புகளையும், பதவிகளையும் பெற்று அனுபவித்த பன்னீர் செல்வம் பதவி வெறி பிடித்து எம்ஜிஆர் வழங்கிய அதிமுக கட்சி அலுவலகத்தை குண்டர்கள் வைத்து தாக்கியுள்ளார். மேலும் அதிமுக கட்சி அலுவலகம் தனிநபர் சொத்து அல்ல, இது தொண்டர்களின் சொத்து இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது.
இதையும் படிங்க: போக்குவரத்துத்துறை தனியார் மயமா? தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்.. திமுகவை எதிர்க்கும் ராமதாஸ்
எம்ஜிஆர், ஜெயலலிதா இரு தலைவர்கள் அமர்ந்த கட்சி அலுவலகத்தை குண்டர்களை வைத்து அடித்து உடைத்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கக்கூடிய கட்சி அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தது, ஒன்றரை கோடி தொண்டர்களை நெஞ்சில் காலால் உதைத்ததை போன்ற செயல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையுயையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம். உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் உற்சாக வரவேற்பு அளித்தது ஏன்..? செல்லூர் ராஜூ கூறிய புதிய தகவலால் பரபரப்பு
ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என்று தெரிவித்தார். முன்னதாக பழனிக்கு முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அதிமுக தொண்டர்கள் பழனி பேருந்து நிலையம் முன்பு வரவேற்பு அளித்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் மற்றும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர்.