Asianet News TamilAsianet News Tamil

Jai bhim நாங்கள் நெருப்பிலே பிறந்தவர்கள்... சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகணும்... பூ.தா.அருள்மொழி பிடிவாதம்..!

நெருப்பிலே பிறந்தவர்கள் நெருப்புக்கு சமமானவர்கள் என்பதை எடுத்துச் சொல்லத்தான் அந்த அக்கினி கலசத்தை எங்கள் அடையாளமாக வைத்துள்ளோம்.

We were born on fire ... Surya will apologize ... Pooh Arulmozhi is stubborn ..!
Author
Tamil Nadu, First Published Nov 23, 2021, 7:09 PM IST

சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என பூ.தா அருள்மொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘’காலண்டரில் வருடம் தெரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் அக்னி கலசத்தை வைத்தோம் என்று அவர் சொல்வது தவறு. அந்த அக்னிகலசத்தில் ஆண்டு போடவில்லை. வருடத்தை குறிப்பிடுவதற்காக தான் காட்டி இருந்தோம் என்று சொல்வது பொருத்தமாக இல்லை. We were born on fire ... Surya will apologize ... Pooh Arulmozhi is stubborn ..!

இப்படி ஒரு பெரிய சாதியை அவமானப்படுத்தும் வேலையை செய்துவிட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள் என்றால் அதை தட்டி கேட்க வேண்டியது எங்களது கடமை. அக்னி கலசத்தை எங்களுக்கு புனிதமான சின்னமாக நாங்கள் கருதுகிறோம். அக்னி கலசத்தை இதுபோல ஒரு கொலைகார பயன்படுத்துகிறார் என்று சொன்னால், வன்னியர்கள் அத்தனைபேரும் கொலைகாரர்கள் என்று பழி சுமத்துவது போல் இருக்கிறது. அது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.We were born on fire ... Surya will apologize ... Pooh Arulmozhi is stubborn ..!

இப்போது இந்த படக்குழுவினர் இப்படி சொல்லி எங்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் பின்புலமும், மிகப்பெரிய ஆதரவைப் பெற்றவர்களும் அல்ல. இவர்களுக்கு பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். யாருடைய தைரியத்தில் அவர்கள் சொன்னார்கள் எவருடைய பின்புலத்திலேயே சொன்னார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் இந்த மன்னிப்பு என்ற நாடகத்தை அங்கே உள்ள ஒரு நபர் சொன்னதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் குழுவிலே இருக்கிற ஒரு சாதாரண ஆள் எங்களிடம் மன்னிப்பு கேட்டார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. படத்திற்கு காரணகர்த்தாவாக உள்ள தயாரிப்பாளர், நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு தனிநபர் பாதிக்கப்பட்டால் மானநஷ்ட வழக்கு தொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற, கடைபிடிக்க இந்த நாட்டிலே பெரிய சமூகத்தை இழிவு படுத்தியதால் அவர்கள் மான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.We were born on fire ... Surya will apologize ... Pooh Arulmozhi is stubborn ..!

நெருப்பிலே பிறந்தவர்கள் நெருப்புக்கு சமமானவர்கள் என்பதை எடுத்துச் சொல்லத்தான் அந்த அக்கினி கலசத்தை எங்கள் அடையாளமாக வைத்துள்ளோம். இதை காரணமில்லாமல் அவர்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்? திரைப்படத்துறையில் எத்தனையோ கலைஞர்கள் புரட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதுபோல ஒரு பெரும்பான்மை சாதியை அலட்சியப்படுத்தி கேலிசெய்து படம் எடுத்ததில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios