Asianet News TamilAsianet News Tamil

கோவில்கள், புராதான சின்னங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த உத்தரவை வரவேற்கிறோம். எல்.முருகன்.

சென்னை உயர்நீதிமன்றம் கோவில்கள், மற்றும் புராதான சின்னங்கள் பாதுகாக்க அதிரடி உத்தரவுகளை வழங்கி உள்ளதை பாரதிய ஜனதா கட்சி பெரிதும் வரவேற்று பாராட்டுகிறது. 

We welcome the order of the Chennai High Court to protect temples and ancient monuments. L. Murugan.
Author
Chennai, First Published Jun 10, 2021, 1:53 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் கோவில்கள், மற்றும் புராதான சின்னங்கள் பாதுகாக்க அதிரடி உத்தரவுகளை வழங்கி உள்ளதை பாரதிய ஜனதா கட்சி பெரிதும் வரவேற்று பாராட்டுகிறது. நினைவுச் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க மாமல்லபுரம் உலக புராதானபகுதி மேலாண்மை ஆணையத்தை எட்டு வாரங்களில் அமைக்க வேண்டும்.  17 பேர்கள் கொண்ட குழுவில் இந்திய, மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்று அறிஞர்கள் பொதுப்பணித்துறை பிரதிநிதிகள், இணைக்கமிஷனருக்கு இணையான அறநிலையத்துறை அதிகாரி, தகுதியான ஸ்தபதி, ஆகம சிற்ப சாஸ்த்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும் என வழிக்காட்டி உள்ளது. குழுவின் ஒப்புதல் இல்லாமல் மத்திய, மாநில சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், கோவில்கள், சிலைகள், சிற்ப்பங்கள் மற்றும் சுவர் சித்திரங்களில் எந்த மாற்றமும் சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்படும் எந்த பணிகளுக்கும் - முறைகேட்டிற்கும் இந்த குழுவே பொறுப்பு என்றாகிறது. 

We welcome the order of the Chennai High Court to protect temples and ancient monuments. L. Murugan.

பாரம்பரிய கோவில்கள், பராம்பரியமற்ற கோவில்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க, புனரமைக்க நடைமுறைகள் அடங்கிய கையேட்டை 12 வாரங்களில் அரசு இறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கது. தொல்லியல் துறை 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவில்களை ஆய்வு செய்து அதன் சேதத்தை மதிப்பிட வேண்டும்.  மக்களின் பரிசீலனைக்காக தொல்லியல் துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்;. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்கள், கோவில்கள் பற்றி தகவல் தெரிவிக்க பொதுவான இணைதளத்தை தொல்லியல் துறை உருவாக்க வேண்டும்.

கோவில் நிதியை, முதலில் கோவில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள் என ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பயன்படுத்த  வேண்டும். உபரித்தொகை  இருந்தால்  மற்ற  கோவில்களில் பராமரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு பெரும் ஆதரவு அளிப்பதாக இருக்கும். கோவில் நிலங்களுக்கு அரசோ அல்லது அறநிலையத்துறை கமிஷனர் தான் அறங்காவலர் எனவும், தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்தநிலங்களை விற்கவோ,கொடுக்கவோ கூடாது.  

We welcome the order of the Chennai High Court to protect temples and ancient monuments. L. Murugan.

கோவில் வசம் தான் இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.  கோவில் நிலங்களைப் பொருத்த வரை பொது நோக்கம் என்ற அம்சத்தை எடுத்துவரக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தியதன் காரணமாக கோவில் நிலங்களை சூறையாடுவது தவிர்க்கப்படும். குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை ஆறு வாரங்களில் தயாரித்து இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.  அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளை கணக்கெடுக்கப்பட்டு அவற்றை புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.  திருடப்பட்ட சிலைகள் பொருட்களின் விவரங்களை இணையத்தளங்களில் வெளியிட வேண்டும். அர்ச்சகர்கள்,ஓதுவார்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்களை அனைவருக்குமான ஊதியத்தை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும்.அது அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும் என்று இது நாள் வரை கவனிக்கப்படாத அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.  இந்த திருப்புமுனை தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்தையும் அரசு செயல்படுத்த முன் வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

Follow Us:
Download App:
  • android
  • ios