பாமக - வின் தேர்தல் அறிக்கையை வர வேற்பதாகவும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே தங்களின் நோக்கம் எனவும்  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில், பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். சசிகலா அரசியலில் இருந்து விளக்குவாத அறிவித்தத்தை வரவேற்கிறோம்.  அதே வேளையில் அவர்களது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கமமும் அதுவே. எனவே அவர்களது கருத்தையும் வரவேற்கிறோம். 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம் நடைபெற்றது. ஆனால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு அது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. தற்போது நடந்த 4மீனவர்கள் மரணம் அடைந்த சம்பவம் கூட  விபத்து  என இலங்கை அரசு  கூறுகிறது. ஆனால் வெளியறவு துறை மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு முருகன் கூறினார்.