Asianet News TamilAsianet News Tamil

’அவர் என்னுடைய அம்மா’...பாக்.சிறையிலிருந்து சுஷ்மா சுவராஜால் மீட்கப்பட்ட ஹமீது கண்ணீர்...

‘சுஷ்மா சுவராஜ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அதை முதலில் வதந்தி என்றுதான் நினைத்தேன். அவ்வளவு அற்புதமான ஒரு ஜீவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்து செல்லமுடியும்?’என்று கண்கலங்கி அழுகிறார் ஹமீது நேஹல் அன்சாரி.
 

We thought it was a rumour, said Hamid Nehal Ansari after he heard the shocking news of the demise of former External Affairs Minister Sushma Swaraj
Author
Delhi, First Published Aug 7, 2019, 12:29 PM IST

‘சுஷ்மா சுவராஜ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அதை முதலில் வதந்தி என்றுதான் நினைத்தேன். அவ்வளவு அற்புதமான ஒரு ஜீவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்து செல்லமுடியும்?’என்று கண்கலங்கி அழுகிறார் ஹமீது நேஹல் அன்சாரி.We thought it was a rumour, said Hamid Nehal Ansari after he heard the shocking news of the demise of former External Affairs Minister Sushma Swaraj

இவருக்கு சுஷ்மா செய்த உதவியை பொதுமக்களே மறந்திருக்கமாட்டார்கள் எனும்போது ஹமீது மறப்பாரா?  ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் நோக்கி செல்வோமா?...மும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரி என்பவர், தன் சமூக வலைத்தள தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கிய அவரை உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் கைது செய்தனர். போதிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்து, உளவு பார்க்கவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வந்ததாகக் கூறி, ராணுவ நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு அவருக்கு 3 வருட சிறை தண்டனையை வழங்கியது. 2012-ல் இருந்து அவர் ஏற்கனவே 3 வருடம் சிறையில் இருந்துள்ளார். மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.We thought it was a rumour, said Hamid Nehal Ansari after he heard the shocking news of the demise of former External Affairs Minister Sushma Swaraj

இந்நிலையில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மாவின் தீவிர நடவடிக்கையால் ஹமிது அன்சாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியதுமே சுஷ்மாவைச் சந்தித்த ஹமீது, நான் விடுதலையானது எல்லாமே உங்களால் தான் நடந்தது என நெகிழ்ச்சியாக தெரிவித்தார். இச்செய்தி அப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. We thought it was a rumour, said Hamid Nehal Ansari after he heard the shocking news of the demise of former External Affairs Minister Sushma Swaraj

இந்நிலையில் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹமிது, சுஷ்மா தன் தாயைப் போன்றவர் எனத் தெரிவித்துள்ளார். மேலும்,  நான் ஆழ்ந்த இரங்கலை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் என்றுமே என் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவர் என் தாயைப் போன்றவர். நான் பாகிஸ்தானில் இருந்து வெளிவரவும், வெளிவந்த பின்னும் பல வழிகளில் எனக்கு உதவி செய்தார். அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப மனது இன்னும் மறுக்கிறது’எனத் தெரிவித்துள்ளார்.    

Follow Us:
Download App:
  • android
  • ios