திமுகவை அழிக்க ஸ்டாலினே போதும். நாம் எதையும் செய்ய வேண்டாம் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
திமுகவை அழிக்க ஸ்டாலினே போதும். நாம் எதையும் செய்ய வேண்டாம் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
பண்ருட்டியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ‘’எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கிறோம். எனவே இத்தேர்தல் நமக்குமிக முக்கியமான தேர்தல். தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுக் கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை ஒத்திவைத்து விட்டு தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றி பெற முடியும். ஜனநாயகக் கட்சியில் கட்சியினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். கருத்துவேறுபாட்டை சற்றுதள்ளிவைத்து தேர்தல் பணியில் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் இது.
அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். ஏனெனில் இது தொண்டர்களால் வழிநடத்தப்படும் கட்சி. இதுவரை தலைவர்கள் வேண்டுமானால் அங்குமிங்கும் இடமாறி கட்சிக்குத் துரோகம் இழைத்திருக்கலாம். ஆனால், தொண்டர்கள் எங்கும் செல்லவில்லை. கட்சியில் உள்ள மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள்தான் கட்சியை வழிநடத்திச் செல்லவேண்டியவர்கள். ஒவ்வொரு அணியினரும், எதிரணியின் வியூகம் பார்த்து செயல்படவேண்டும்.
திமுக குடும்பக் கட்சி. அக்கட்சியில் தொண்டர்கள் எவரும் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. திமுகவை யாரும் அழிக்கவேண்டாம். அக்கட்சியினை ஸ்டாலினே அழித்துவிடுவார். நாம் அமைதியாக இருந்தால் போதும்’’என அவர் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 8, 2021, 1:53 PM IST