இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெறும் வகையில் அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதற்காக மோடி இலங்கை செல்லவுள்ளார்.

மோடி இலங்கை செல்லவுள்ளதையொட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்,

இலங்கை வசம் உள்ள 5 மீனவர்களையும், 134 படகுகளையும் உடனடியாக விடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர்  நரேந்தி மோடி இலங்கை செல்லவுள்ளதால், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து  தமிழக மீனவர்களி மீன் பிடிக்கும் உரிமை பறிபோகாமல் இருக்கும் வகையில், இதற்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படும் வகையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.