நாங்களாகவே தேர்தலை சந்திக்கும் அளவுக்குத்தான் எங்களை நாங்கள் தயார் படுத்தியிருக்கிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், தமிழிசையிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், ஒரு கட்சி தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். ஆனால் எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில், நாங்கள் நாங்களாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நாங்களாகவே தேர்தலை சந்திக்கும் அளவுக்குத்தான் எங்களை நாங்கள் தயார் படுத்தியிருக்கிறோம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், இட்லி மாவுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.