நான் கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்ததாக எனக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல்,உறுப்பினர் ஆனதற்கான எண் கூட  மக்கள் நீதி  மய்யம் மூலம்  மெயில் வந்திருச்சு என தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்தார்.

மேலும், இதே போன்று தானே கிடைத்த மெயிலுக்கு எல்லாம்,கமல் அவர்கள் இது போன்று உறுப்பினர்களை சேர்த்து வருகிறார் என்றும் தெரிவித்து இருந்தார் தமிழிசை... இந்த அனைத்து விவரத்தையும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்த  தமிழிசைக்கு  தற்போது, மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பதிலடி  கொடுத்துள்ளார்

 அதில், பார்ட் 1  இல்

உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I)

 

பார்ட் 2 -இல்

ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II)