எங்களிடம் 115 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் தேவை. அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. 

சசிகலாவால் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சென்று பார்க்கவில்லை. 

காரணம் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் எதிர்கட்சிகளுக்கு இதை ஒரு காரணமாக ஆக்கி விடக்கூடாது எனபதாலேயே சூதனமாக நடந்து கொண்டார் எடப்பாடி.

ஆனால் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் பெருமக்கள் சசிகலாவை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று பார்த்து ஆலோசனை நடத்தி வந்தனர். 

இதைவைத்து துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி ஆர்கேநகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி இடத்தை பிடிக்க முற்பட்டார். 
இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி சூதனமாக அமைச்சர்களை தன் கைக்குள் வைக்கத்தொடங்கினார். 

அமைச்சர்களை கையில் வைத்த எடப்பாடி எம்.எல்.ஏக்களை கோட்டை விட்டு விட்டார். அமைச்சர்கள் டிடிவியை கட்சி நிர்வாகிகள் சந்திக்கூடாது என ஆர்டர் போடுவது, எம்.எல்.ஏக்கள் அதை மீறுவதையுமே வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இதனால் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேனியில் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எங்களிடம் 115 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் தேவை. அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள் என தெரிவித்தார். 

மேலும், பணத்தாசைக்காக கூவத்தூரில் நாங்கள் தங்கவில்லை எனவும், ஒற்றுமைக்காகவே தங்கி இருந்தோம் எனவும் குறிப்பிட்டார். 

தமிழக அரசு மக்களுக்கு நன்மை செய்யவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும், 6 மாத அரசியல் சூல்நிலை காரணமாக சின்னம்மா சசிகலாவாக ஆகிவிட்டார் எனவும் தெரிவித்தார். 

மேலும், அதிமுகவின் ஏணி என்பது எப்போதுமே ஜெயலலிதா மட்டும் தான்  எனவும் கூறினார்.