காவிரி தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் நம்பிக்கையில்லை என அதிமுக எம்.பி. மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்தும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. 

கடந்த 4 நாட்களாக தமிழகத்தை சேர்ந்த திமுக மற்றும் அதிமுக MP-க்கள் இணைந்து நாடாளுமன்ற அலுவல்களை நடத்த விடாமல் முடக்கி வருகின்றனர். 

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோனை நடத்துகிறது. இதற்கிடையே 5வது நாளாக இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இரு அவைகளிலும் இன்றும் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், 5வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை காவிரி தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளார்.