Asianet News TamilAsianet News Tamil

கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க இதை செய்தே ஆகனும்.. கதறும் சுகாதாரத்துறை செயலாளர்.

3 ஆம் அலைக்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதை போல தனியார் மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றார், சிலர் இந்த நிலையிலும் பணம் ஈட்டும் நோக்கில் உள்ளனர் என்றும், அதை மாற்றிகொள்ள வேண்டும் என்றும். தி.நகர், தானா தெரு போன்ற இடங்களில் இன்னமும் மக்கள் முககவசம் அணியாமல் சுற்றுவதாக கூறினார். 

We did this to escape the 3rd wave .. Screaming Health Secretary.
Author
Chennai, First Published Jul 23, 2021, 1:47 PM IST

தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரித்தால் தான் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

We did this to escape the 3rd wave .. Screaming Health Secretary.

தமிழகத்தில் கொரொனா  இரண்டாம் அலையின் பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் கொரொனாவை முற்றிலுமாக குறைக்க தடுப்புசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த அவசர நிலையில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவி வருகிறது. ஆனாலும் இடையிடையே மத்திய அரசு அனுப்பி வைக்கும் தடுப்பூசிகள் முழுவதுமான மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் கூறியதாவது, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரித்தால் தான் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா3வது  அலையில் இருந்து தப்பிக்க முடியும் என்றார். 3 ஆம் அலைக்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதை போல தனியார் மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றார், சிலர் இந்த நிலையிலும் பணம் ஈட்டும் நோக்கில் உள்ளனர் என்றும், அதை மாற்றிகொள்ள வேண்டும் என்றும்.

We did this to escape the 3rd wave .. Screaming Health Secretary.

தி.நகர், தானா தெரு போன்ற இடங்களில் இன்னமும் மக்கள் முககவசம் அணியாமல் சுற்றுவதாக கூறினார். மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் அரசின்  இலவச தடுப்பூசி திட்டத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யபடும் 25 சதவீத கொரோனோ தடுப்பூசிகள் பெரும்பாலும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் வீணடிப்பதை தவிர்க்க சிஎஸ்ஆர் நிதிப்பங்களிப்பில் தனியார் மருத்துவமனைகளும் இலவச தடுப்பூசி வழங்க ஆதரவு தெரிவிக்க வேண்டும், தேவையான ஆக்ஸிஜன் படுகைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனியார் மருத்துவமனைகளை கேட்டுக் கொண்டார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios