வரும் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்றும் வரும் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தான் போடியிடும். என அவர் தெரிவித்தார்.  தமிழக அமைச்சர்கள் பாஜகவினர் குறித்து பேசியதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை, வாய் என்ன சொல்கிறது என்பதே முக்கியம். எனக்கூறினார். தேமுதிக கிங் ஆக இருக்கப்போவதாக சொல்வதற்கு வாழ்த்து கூறி பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களது தன்னம்பிக்கை மூலம் கட்சியை நடத்துகிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர்கட்சிகளிடம் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சமுள்ளது என்றும் திமுக தலைவர் ஸ்டாலினை தவிர வேறு யாரையேனும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் கூட்டணி சிதறு தேங்காய் போல உடைந்துவிடும் எனக் கூறினார்.