ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மக்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார் .

தாங்கள் தான் உண்மையான அதிமுக கட்சியினர் என்றும், தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள் என்றும் குறிபிட்டார் . தொடர்ந்து பேசிய ஒபிஎஸ் “ நேற்று ஒரு தனியார் தொலைகாட்சியின் மூலம் தீபக் தன் கருத்தை தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து என குறிபிட்டார் . தீபக் தன்னுடைய உள்ளத்தில் இருந்து கருத்து கூறியுள்ளார் என்றும் மேலும் தெரிவித்தார். 

பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்க தயாராக உள்ளேன் என்றும் , மக்களின் ஆதரவு தங்களுக்கு தான் உள்ளது என்றும் மேலும் ஒரு முறை உரக்க குறிப்பிட்டார் பன்னீர் செல்வம்

 சசிகலாஅதிமுக பொதுக்செயலாளராக பதவியில் இருப்பது செல்லாது எனவும் , கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார் .