we are ready to face trust vote in assembly said jayakumar

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பழனிசாமி அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மையான 118 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால், திமுக கூட்டணி 98 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளது. தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என அவர்கள் 19 பேர். இந்த இரண்டும் சேர்த்தே 117. இரட்டை இலையில் போட்டியிட்டு வென்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகிய மூவரும் பழனிசாமி அரசுக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கையில், பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மைனாரிட்டி அரசு நீடிப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திவருகிறார். ஆனால், அதேநேரத்தில், திமுகவும் தினகரனும் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் விமர்சிப்பது இது குதிரை பேர அரசு அல்ல. குதிரை வேக அரசு. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற ஸ்டாலின், தினகரனின் கனவு பலிக்காது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சந்திக்க ஆட்சியாளர்கள் தயாராகவே இருப்பதாக தெரிவித்தார்.