Asianet News TamilAsianet News Tamil

நாங்கள் போட்டியிடவில்லை... அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்து மொத்தமாய் அள்ளத்துடிக்கும் பாஜகவின் செம டீல்..!

 கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

We are not competing ... The BJP camel deal that will leave the AIADMK and win the whole lot
Author
Tamil Nadu, First Published Mar 3, 2021, 10:52 AM IST

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு திடீரென வெளியானதால், அதிமுக மற்றும் திமுக இடையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நாள், அதிமுக- பாமக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது. அடுத்ததாக பாஜக உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து உறுதி செய்து ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடத்த சில தகவல்கள் கசிந்துள்ளன.We are not competing ... The BJP camel deal that will leave the AIADMK and win the whole lot

தொகுதி பங்கீடு குறித்து இரு தினங்களுக்கு முன் சென்னை நட்சத்திர விடுதியில் அமித்ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை அதிமுகவுக்கு விட்டு தருவதற்கு முன் வந்துள்ளது. அதற்கு பதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

We are not competing ... The BJP camel deal that will leave the AIADMK and win the whole lot

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தல் குறித்து பேசவில்லை. சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக தரப்பில் பாஜக கேட்ட தொகுதிகளை விட, குறைவாக வழங்க முன்வந்தபோது, அமித்ஷா நடக்க இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. உங்களுக்கு விட்டு கொடுக்கிறோம். ஆனால், நாங்கள் கேட்கும் சட்டமன்ற தொகுதியை குறைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை முழுமையாக பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிவரை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக முன் வந்ததாக கூறப்படுகிறது.We are not competing ... The BJP camel deal that will leave the AIADMK and win the whole lot

இந்நிலையில் தனிப்பெரும்பாண்மையுடன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதை விட, கூடுதலாக சட்டமன்ற தொகுதிகளை பெற்று தமிழக சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை உயர்த்துவது என முடிவு செய்துள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை பாஜக போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios