எங்களை யாரும் கடத்தவில்லை என்றும் நாங்கள் ரிலாக்ஸா  ரெஸ்ட் எடுத்திட்டு போகவே புதுச்சேரி வந்திருக்கிறோம் என்று டி.டி.வி.முதரவு எம்எல்ஏக்கள் தங்கதுரை மற்றும் டாக்டர் முத்தையா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, டி.டி.வி.தினகரன் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்மிக்கு எதிராக தங்களது நடவடிக்கைளை தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியை அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை மற்றும் பரமக்குடி எம்எல்ஏ முத்தையா ஆகியோர், நாங்கள் அனைவரும் ரெஸ்ட் எடுப்பதற்காகத்தான் இங்கு வந்தோம் என தெரிவித்தார்.

தாங்கள் யாரும் கடத்தப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியை 122 எம்எல்ஏக்களும் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம் என்றும், ஆனால் இத்தனை பிரச்சனைக்கும்  காரணமான ஓபிஎஸ் மற்றும் 11 எம்எல்ஏக்களை கட்சிக்கும் மீண்டும் கொண்டு வர எங்களிடம் யாராவது பேசினார்களா? என கேள்வி எழுப்பினர்.

இப்பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

நாங்கள் 122 பேர்தான் எடப்பாடியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அல்ல என்றும் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.