Asianet News TamilAsianet News Tamil

நான் தேர்தல் கால செளக்கிதார் இல்லை... மோடியை தாறுமாறாக விமர்சித்த மம்தா!

“குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை தேச துரோகிகள் என்கின்றனர் பாஜகவினர். ஆனால், என்.ஆர்.சி. அமலாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளார்கள். தினந்தோறும் அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களை வாங்க நீண்ட வரிசையில் காத்துகிடக்கிறார்கள். அஸ்ஸாமில் மட்டும் 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் 31 பேர் இறந்தார்கள். மேற்கு வங்காளத்தி என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம்."

WB chief minister Mamata bannerji slam pm modi
Author
West Bengal, First Published Feb 4, 2020, 11:07 PM IST

தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னைத் தானே ‘நான் ஒரு சௌக்கிதார்’ என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியைப் போல அல்ல நான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.WB chief minister Mamata bannerji slam pm modi
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கு வங்க முதல்வரும் திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேரணிகளை நடத்திவருகிறார். அந்த வகையில் இன்றும் ஒரு பேரணியில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இந்தப் பேரணியின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, பாஜகவையும் அக்கட்சி தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். WB chief minister Mamata bannerji slam pm modi
“குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை தேச துரோகிகள் என்கின்றனர் பாஜகவினர். ஆனால், என்.ஆர்.சி. அமலாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளார்கள். தினந்தோறும் அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களை வாங்க நீண்ட வரிசையில் காத்துகிடக்கிறார்கள். அஸ்ஸாமில் மட்டும் 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் 31 பேர் இறந்தார்கள். மேற்கு வங்காளத்தி என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம். WB chief minister Mamata bannerji slam pm modi
தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னைத் தானே ‘நான் ஒரு சௌக்கிதார்’ என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியைப் போல அல்ல நான். நான் தினந்தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்து வருகிறேன். பாஜக தலைவர்களின் தூண்டுதல் காரணமாகவே ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஷாஹீன் பாக் போன்ற இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது.” என்று மம்தா பானர்ஜி பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios