விராலிமலை தொகுதி காலி…அமைச்சர் விஜய பாஸ்கரை கலாய்த்து வரும் பொது மக்கள்..

அதிமுகவில் தற்போது நடைபெற்ற வரும் அதிகாரச் சண்டையில் சசிகலாவா? அல்லது ஓபிஎஸ் சா ? என இரு தரப்பினர் பிரிந்து நின்று செயல்பட்டு வருகின்றனர்.

சசிகலாவுக்கு ஆதரவாக பாண்டியராஜனைத் தவிர அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர். ஆட்சி அமைக்க ஆளுநர் அனைத்தால் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் கூவத்துர் ரிசர்ட்டில் கடந்த 7 நாட்களாக வெளியில் எங்கும் செல்லாமல் தங்கியுள்ளனர்.

ஆனால் இவர்களைத் தேர்ந்தெடுத்த பொது மக்கள் சசிகலாவை வுரும்பவில்லை என்பதால், தங்கள் எம்எல்ஏக்களை ஓபிஎஸ் பக்கம் வரச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் மதில் மேல் பூனை போல் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ வும் அமைச்சருமான விஜய பாஸ்கரை அத்தொகுதி மக்கள் கலாய்த்து வருகின்றனர்.

இவர் குறித்து டுவிட்டர், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத் தளங்களில் விஜய பாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும் இவரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதன் உச்சகட்டமாக தற்போது விராலிமலை தொகுதி காலியாக உள்ளது என்றும் அமைச்சர் மீதுள்ள தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வாட்ஸ்அப் மெஸ்சேஜ் வைரலாக பரவி வருகிறது.