Asianet News TamilAsianet News Tamil

சென்னைக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர்.. கூவத்தில் கழிவுநீர் கலப்பது குறைக்கப்படும்.. அமைச்சர் அதிரடி.

காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

 

 

Water from Cauvery river to Chennai .. Sewage mixing in Koovam will be reduced .. Minister Action.
Author
Chennai, First Published Jun 30, 2021, 11:49 AM IST

காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொறுத்தப்பட்ட இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Water from Cauvery river to Chennai .. Sewage mixing in Koovam will be reduced .. Minister Action.

இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னையில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொறுத்தப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து துண்டிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தியுள்ளார். மேலும் குடிநீர் வாரிய அனைத்து பணிமனை பொறியாளர்களும் குடிநீரின் தரம் மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பரிசோதிக்க வேண்டும் என பல்வேறு முடிவுகள் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, சென்னை மொத்த குடிநீர் தேவை 1150 எம்எல்டி என்றும், அதில் 840 முதல் 850 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள குடிநீரை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். மேலும் காவிரி ஆற்றில் மிகை நீர் இருக்கும் பட்சத்தில் அதனை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் இது. இது நடைமுறைக்கு வருவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார். 

Water from Cauvery river to Chennai .. Sewage mixing in Koovam will be reduced .. Minister Action.

லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், சென்னையில் 8.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது என கூறினார். சென்னையில் 4 ஆயிரம்  கி.மீ நீளம்  கழிவு நீர் கட்டமைப்பு உள்ளது. மழைநீர் அதிகம் தேங்கும் தெருக்களில் முன்னுரிமை அளித்து தூர் வாரப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன் அனைத்து பணிகளும் நிறைவடையும். கழிவுநீர் குழாய்களை அடைப்பெடுக்கும் பணிக்காக புதியதாக 76 நவீன இயந்திரங்கள் 3 மாத கால அளவிற்குள் கொண்டு வரப்படும். 10500 குடும்பங்களுக்கு புதியதாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.

Water from Cauvery river to Chennai .. Sewage mixing in Koovam will be reduced .. Minister Action.

850 எம்எல்டி கழிவு நீர் வெளியேறுகிறது என்றும் 450 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சரி செய்யப்பட்டதும் சென்னையில் கூவம் நதியில் கழிவுநீர் கலப்பது குறையும்.
மேலும், கூவத்தை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுக்குடிநீர் திட்டங்கள் , பாதாள சாக்கடை திட்டங்கள் என 72 திட்டங்கள் 13 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது அமைச்சர் நேரு தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios