அடிக்கடி கை கழுவுங்கள் இது கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி பீஹாரில் உணர்த்திய பாடம் என காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு காங்கிரஸ் கட்சியை கடுப்பேற்றி உள்ளார்.

கடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் நடிகை குஷ்பு. பிறகு திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேசிய செய்தித்தொடர்பாளராக செயலாற்றி வந்தார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்து வந்த குஷ்பு, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். இதனை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர். நேற்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், 'தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாக கருதி தனித்துவிடப்படும்' என கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பிகார் நடந்த சட்டசபை தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு விமர்சிக்கும் வகையில் குஷ்பு, தனது ட்விட்டர் பதிவில், ’’அடிக்கடி கை கழுவுங்கள். இது கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள். இது மோடி பீகாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இது எதிரொலிக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.