ரஜினி துவங்க இருக்கிற கட்சிக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள அர்ஜுன மூர்த்தி, தமிழக பா.ஜ.க அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர். இவர், பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அறிக்கை கொடுத்து இருந்தார். அவர், ரஜினி கட்சிக்கு போகாமல் இருந்தாலும் அவரை நீக்கி விடுவதாகவே பா.ஜ.க முடிவில் இருந்தது. ஏனென்றால், திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு உறவினர் என்கிறார்கள். 

''இதனால் தி.மு.க.,வுக்கு நெருக்கமாக இருக்கிறார் என பா.ஜ.க, மேலிடத்துக்கும் புகார்கள் போயிருக்கின்றன. அதுவும் இல்லாமல் ஒரே முகவரியில், ஏழு போலி நிறுவனங்களை நடத்தி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் அவரைப் பற்றி புகார்கள் போய் இருக்கிறது. இதனால், அவரை நீக்கிவிடலாம் என்று இருந்த  இருந்த சூழலில் அவராகவே போய் விட்டார் என பாஜகவினர் கூறுகின்றனர். முரசொலி மாறனின் உதவியாளராக இருந்தார் எனக்கூறப்பட்டாலும் அதனை தயாநிதிமாறன் மறுத்து இருந்தார். ஆனால், பத்திரிக்கையாளர் ஒருவர் தயாநிதிமாறன் -அர்ஜூனமூர்த்தி ஆகியோரிடம் இருந்த ரகசிய தொடர்பை வெளிப்படுத்தி இருந்தார்.  அர்ஜூனமூர்த்தி விவகாரத்தில் ரஜினிகாந்த் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.