’தி கேட் இஸ் அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதைத்தான் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் கடும் காட்டத்துடன் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதுதான் பஞ்சாயத்து!

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து நாட்டையே புரட்டிய சம்பவம் நிகழ்ந்து வரும் நவம்பர் 8-ம் தேதி ஓராண்டு முடிகிறது. இந்த அறிவிப்பு வெளியான நாள், இந்தியாவின் கறுப்பு நாள் என்று சொல்லி அதே நாளில் கறுப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தேசமெங்கும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். 

இந்நிலையில் அதேநாள் மாலையில் தன் தலைமையில் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடத்திட திட்டமிட்டார் அரசர். அதற்கு டெல்லியிடம் அனுமதி கேட்டபோது அது மறுக்கப்பட்டது. இந்த மறுப்புக்கு பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த தனக்கு வேண்டாத தலைகள் யாரோ ஒருவர் இருப்பதாக அரசர் தரப்பு சந்தேகித்தது. 

இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் பேட்டியளித்த திருநாவுக்கரசரிடம், ‘கட்சி செயலற்று கிடப்பதாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘அதறெக்ல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.’ என்று நாக் அவுட் கொடுத்தார். 

இந்நிலையில் திருநாவுக்கரசர் தலைமை மீதான அதிருப்தியை இப்படி பொதுவெளியில் போட்டுடைக்கும் இளங்கோவன் தான், அவரது பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கும் தடைக்கல்லை போட்டது என்றே அரசரின் தரப்பு கருதுகிறது. ‘தலைவருக்கு எதிராக குறுக்குசால் ஓட்டியது யார்? யாரென்று? தேடினோம். அது இளங்கோவன் தான் என்று இப்போது தெரிகிறது. பூனை வெளியே வந்துடுச்சு!’ என்று பொங்குகிறார்கள்’. 

இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!