அலோபதி - சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை மருத்துவத்தை நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்பைவிட வேகமாக பரவி வருகிறது. நோயோடு வாழ பழக வேண்டியதுதான் என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளரும் அறிவித்துவிட்ட நிலையில், எப்படி பழகுவது என புரியாமல், நோயை விலை கொடுத்து வாங்கிக் கொண்டுள்ளார்கள் தமிழக மக்கள் என்பதற்கு இந்த புள்ளி விவரம் ஒரு சான்று. குறைந்த பரிசோதனை தமிழகத்தில் நேற்றுமுன்தினம், ஒரே நாளில் 669 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. நேற்று அதைவிட கொடுமை. பரிசோதனை அளவு குறைந்த நிலையிலும், நேற்றுதான் இதுவரை இல்லாத அளவுக்கு, பாதிப்பு அதிகம். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்தனர். தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அலோபதி - சித்த மருத்துவ கூட்டு சிகிச்சையால் 7 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மருத்துவத்தை நீட்டிக்க வேண்டும். கொரோனாவை சித்த மருந்துகள் எவ்வாறு குணப்படுத்துகின்றன என்பதை ஆய்வக சோதனைக்கு உட்படுத்தி சான்றளிக்க வேண்டும்’’ எனக் கூறி இருக்கிறார்.