அமமுகவில் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்துவந்தார் தங்கதமிழ்ச்செல்வன் தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததிலிருந்து டிடிவி தினகரனுக்கும் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. தங்க தமிழ்ச்செல்வன் கட்சி மாறப்போவதாக கடந்த ஒரு வாரகாலமகாவே ஊகங்கள் வெளியாகிவந்தன.


 
ஆனால், அதையெல்லாம் தங்கதமிழ்ச்செல்வன் மறுத்து வந்தார். இந்நிலையில் அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை திட்டி பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தங்கதமிழ் செல்வனை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆக்யோர் தான் இயக்குகிறார்கள் என்றும் அவர் விரைவில அதிமுகவில் இணைய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தங்கதமிழ் செல்வனுக்கு  எதிராக தமிழகம் முழுவதும் அனல் அடிக்கும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கட்சிக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே… ஜெயலலிதா ஆட்சியை மழிக்க நினைத்த துரோகி தங்கதமிழ் செல்வன்… அம்மா ஆன்மா தங்கதமிழ் செல்வனை ஒரு போதும் மன்னிக்காது  என அந்த வால்போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மற்றும் கரூரில் இந்த வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும பரபரப்பு ஏற்பட்டுள்ளது.