Walk out of DMK
போராட்டங்கள் நடத்தி அரசுக்கு நெருக்கடி தருவோருக்கு அரசு ஊழியர்கள் துணைபோகக் கூடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மாநில அரசின் நிதி மற்றும் மக்கள் நலன் கருதி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பரேவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், அரசு ஊழியர்களுக்கு 70 சதவீத வருவாய் செலவிடப்பட்டு வருவதாக கூறினார். அரசு ஊழியர்களின் நலன் கருதி 7-வது ஊதிய குழுவை
அமல்படுத்தியுள்ளோம்.
மாநில அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு போராட்டம் செய்பவர்களுக்கு துணைபோகாமல் இருக்க வேண்டும் என்றார். துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சுக்கு திமுக கண்டனம் தெரிவித்தது. போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களை அழைத்து பேச வேண்டும் என்று திமுக
வலியுறுத்தியது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
