காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் அருகில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னாடி வேகமாக வந்த லாரி  அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காஞ்சிபுரம் அதிமுக   மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத்  கணேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  

வாலாஜா கணேசனின் கார் மீது மோதிய லாரி வரதராஜபுரம் முன்னாள்  ஊராட்சி மன்ற திமுக தலைவர் எம் செல்வமணியின் மகன் எத்திராஜுக்கு சொந்தமானது என தெரியி வந்தது.