இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கோவி ஷீல்ட் தடுப்பூசியின் மேம்பாடு மற்றும் உற்பத்தி, செயல்முறை உள்ளிட்டவைகள் குறித்து பிரதமர் மோடி  நாளை ஆய்வு செய்ய உள்ளார். அதற்க்காக அவர் ஹகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸிலிருந்து மீளமுடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் வைரஸை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி, சோதித்து வருகின்றன. இந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலை க்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியை பூனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது இந்நிலையில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆகியவை இணைந்து இந்தியாவில் 15 நகரங்களில்  கோவி ஷீல்ட் தடுப்பூசி பரிசோதனையை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் உலகம் முழுவதும் கோவி ஷீல்ட் மூன்றாம் கட்ட பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாம் கட்ட பரிசோதனையை அதிரடியாக வெளியிட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி 80% ஆற்றல் மிக்கவை எனவும், இது மனிதர்களுக்கு செலுத்தும்போது 90% வரை பலனளிக்கிறது  எனவும் கூறியுள்ளது. இதுவரை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உருவாகவில்லை என்றும், நோய் தீவிரமடையவும்  இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை கோவி ஷீல்ட் தடுப்பூசியின் மேம்பாடு மற்றும் உற்பத்தி, செயல்முறை உள்ளிட்டவைகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார். அதற்க்காக அவர் ஹகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார். 

அப்போது தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் அவற்றில் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு, பக்க விளைவுகள் போன்றவற்றைக் குறித்து அவர் கேட்டாறிவார் என தெரிகிறது.   இந்த தடுப்பூசியின் விலை மற்றும் அதை மக்களுக்கு வழங்குவதற்கான முறை குறித்தும்  குறித்தும் பிரதமர் விஞ்ஞானிகளுடன் விவாதிப்பார் என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கு பின்னர் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.