திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் இணைந்த சம்பவம் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி, நாங்கள் பாஜகவில் சேர்ந்தது மகிழ்ச்சி தருணமாக கருதுகிறோம் என தெரிவித்துள்ளார். நான் திமுகவில் நீண்ட காலமாக உழைத்தவன். பணியாற்றியவன் என்று சொல்வதை விட எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தவன். கடந்த சில வருடங்களாக திமுக இயக்கம் எந்த நோக்கத்திற்காக தொற்றுவிக்கப்பட்டதோ, இந்த நோக்கத்தில் இருந்து பிரிந்து செல்கிறார்கள். கொஞ்சம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், பாரதிய ஜனதா கட்சி முன்னேறிய சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமான கட்சி என்று போதித்துவிட்டார்கள். 

பிறகு தான் தெரிந்தது. இந்த கட்சி இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்குமான கட்சி என்று உணர்ந்த காரணத்தினால் இன்று கட்சியிலேயே இணைந்து இருக்கிறோம். தலைவர் இல.கணேசன் சொன்னது போல, தமிழக பாஜக தலைவர் முருகனை மரியாதை நிமிர்த்தமாகதான் பார்க்க வந்தோம். 

கமலாயத்திற்கு செல்லலாமா என்று கேட்டார்கள். அறிவாலயத்தில் இருந்து கமலாயத்திற்கு வந்தது ஒரு தவறு என்கின்றார்கள். நான் மரியாதை நிமிர்த்தமாக வளர்ந்த சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமான இந்த இயக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயம், அருந்ததியர் சமுதாயத்திற்கு தலைவர் பதவியை சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் கொடுத்த ஒரு கட்சி பாஜக தான். 

சாதியில்லை, மதம் இல்லை என்று நேரம் கணக்கில் பேசுகிறார்கள். ஆனால், அங்கு தான் சாதி வேறுபாட்டிற்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள். இதை நான் கண்டறிந்தவன். இந்த வகையில் இந்த பதவியை வழங்கிய பாஜக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நாட்டா  அவர்களுக்கு என்னுடைய சமுதாயம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம் இந்த சமுதாயத்தை யாரும், கை தூக்கி விட வேண்டும் என்று எண்ணம் யாருக்கும் வரவில்லை. அறிவு இருந்தாலும், ஆற்றல் இருந்தாலும் அங்கீகரிக்க வேண்டும் அரசியல் ரீதியாக. அந்த வகையில் பாஜக கட்சி அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்தது ஒவ்வொரு அருந்ததியரும் தனக்கு பதவி கிடைத்ததாக தமிழகத்தில் எண்ணுகிறார்கள் என்று  வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.