பணபலத்தையும் தண்டி ரவீந்திரநாத் தேனியில் தோல்வி அடைவார் என்றே உளவுத்துறை ரிப்போர்ட்டால்,  ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்கவைக்க, நேற்றிரவு இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட வாக்கு இயந்திரங்கள்  கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது. தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் வர வேண்டிய அவசியம் என்ன? இப்போது வரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதில் இல்லை! சந்தேகம் வலுத்துள்ளது.

தேனி மக்களவைத் தொகுதியில்துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர். ரவீந்திரநாத்குமார் தரப்பில் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படலாம் என எதிர்கட்சிகள் சந்தேகமடைந்துள்ள சூழலில், திடீரென, 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை இரவானதும் கொண்டுவரப்பட்டது சந்தேகம் வலுவானது.

இப்படி அவசர அவசரமாக இருட்டியதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கிய தகவல் அறிந்த காங்கிரஸ், திமுகவினர் உள்ளிட்ட கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த புதிய இயந்திரங்களை வைத்து வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி செய்ய ஆளும் தரப்பு திட்டமிடுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

ஓபிஎஸ் எப்படியாவது தன் மகனை கரையேற்ற முயற்சிக்கிறார். கோடி  கோடியாய் வாரி இறைக்கப்பட்ட பணத்தையும் தாண்டி ரவீந்திரநாத் தேனியில் தோல்வி அடைவார் என்றே உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. ஆனால் அதையும் மீறி மகனை ஜெயிக்க வைக்க பலத்த முயற்சி எடுத்து வருகிறார் பன்னீர் செல்வம். இதற்காகவே அவர் காசிக்கு சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவார் கல்லூரிக்குதான் இந்த இயந்திரங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கே செல்வதற்குள் தகவல் பரவியதால் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் இறக்கிவிட்டார்கள்.  

இதுகுறித்து வட்டாட்சியர் எவ்வளவோ பேசியும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் வர வேண்டிய அவசியம் என்ன? ஆனால் இநத கேள்விக்கு இப்போது வரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதில் இல்லை!