You ... Me ... BJP vs Congress brisk Counting
மணிப்பூர், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான இபோபி சிங் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.
இதில், உத்தரபிரதேச மாநிலத்தில் (மொத்த தொகுதிகள் 403) பாஜக 133 இடங்களில் முன்னிலையிலும், சமாஜவாடி 43 இடங்களை பிடித்து 2வது இடத்தையும் தக்க வைத்துள்ளன.
பஞ்சாப்பில் (மொத்தம் 117) காங்கிரஸ் 22 இடத்தில் முன்னிலையிலும், ஆம் ஆத்மி 7 இடங்களை பிடித்து 7ம் இடத்திலும் உள்ளன.
உத்தராகண்ட்டில் (மொத்தம் 70) பாஜக 18 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி தலா 1 இடங்களிலும் உள்ளன.
மணிப்பூரில் (மொத்தம் 60)காங்கிரஸ் 6 இடத்திலும், பாஜக ஒரே இடத்திலும் உள்ளன.
கோவாவில் (40) காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலையிலும், பாஜக 2 இடத்திலும் உள்ளன.
மேற்கண்ட சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவிடும். மதியம் 1 மணிக்குள்ளாவே பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகும். இதில், வெற்றி கிரீடத்தை சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
அனைத்து வாக்கு எண்ணும் பகுதிகளிலும், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

