Vote collection to Dinakaran

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தரப்புக்கு ஆதரவாக ஓட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி வாழ்வா? சாவா? என்ற நிலையில், டிடிவி தினகரன் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரனுக்கு ஆர்.கே.நகர் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவர் இறந்த பிறகு, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஜெ. மறைவுக்குப் பிறகு அணிகளாக பிரிந்த அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். பணப்பட்டுவாடா காரணம் காட்டி, ஆடர.கே.நகர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஏற்கனவே அதிமுக புரட்சி தலைவி அணியில் போட்டியிட்ட மதுசூதனன், அதிமுக அணியில்
போட்டியிடுகிறார். அதிமுக அம்மா அணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட டிடிவி தினகரன், தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகரில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆனாலும், ஆர்.கே.நகரை சுற்றி வந்தாலும் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில் படுவது குக்கர்தான். பெண்கள் ஒவ்வொரு குழுவாக குக்கரை தூக்கிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ள பெண் ஒருவர் கூறும்போது, ஒரு நாளைக்கு ஒரு தலைக்கு 300 ரூபாய் கொடுக்கிறாங்க... மதியம் சாப்பாடு வாங்டிக கொடுக்குறாங்க... நாங்க எடுத்துட்டு போற குக்கரும் அவங்கதான் வாங்கிக் கொடுத்தாங்க. பிரசாரம் முடியும் வரை குக்கரை எங்களையே பத்திரமா வெச்சிருக்க சொன்னாங்க.. முடிஞ்சதும், நாங்களே குக்கரை எடுத்துக்கலாம்னும் சொல்லிட்டாடங்க. பிரச்சாரத்துக்குப் போற எல்லாருமே இந்த தொகுதிக்காரங்கதான். வெளி ஆட்கள் யாரும் இங்கே வரலை. இங்கேயே தலைவருக்கு போதுமான ஆட்கள் இருக்காங்க. அதனால் வெளியே இருந்து யாரையும் வர சொல்லவே இல்ல. இங்கேயே தலைவருக்கு போதுமான ஆட்கள் இருக்காங்க. அதனால் வெளியே இருந்து யாரையும் வர சொல்லவே இல்ல என்றார் அவர். 

குக்கரை தலையில் சுமந்தபடி, நம்ம அம்மா வீட்டு தம்பி நிக்குது. அம்மா செஞ்சதைவிட நமக்கு அதிகமா செய்யும். குக்கருக்கு ஓட்டப் போடுங்க... குக்கர் இல்லாத வீடு இன்னைக்கு இருக்குமா... அந்த குக்கரை நாம ஜெயிக்க வெச்சா எவ்வவும் நம்ம வீட்டுல விசிலடிக்கும் என்று ஓட்டு கேட்டு வருகின்றனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி தினகரனுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலை உள்ளது. ஆளுங்கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியமோ. அதே அளவுக்கு தினகரனுக்கும் உண்டு. எனவே இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய 'கட்டாயம்' டிடிவி தினகரனுக்கு உண்டு. அதற்காக வேலையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஆர்.கே.நகர் மக்கள் ஆளுங்கட்சிக்கு அல்வா கொடுப்பார்களா? அல்லது டிடிவி தினகரனுக்கு அல்வா கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.