எந்தப் பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கே வாக்கு பதிவாகிறது என திருமாவளவன் கதறிய நிலையில் எந்த பொத்தானை அழுத்தினாலும், தாமரைக்கு வாக்கு பதிவாகிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி புகார் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நவாஸ்கனி சாயல்குடியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’சிக்கல் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் எந்த சின்னத்தை தேர்வு செய்தாலும் அதில் தாமரை சின்னத்திற்கே வாக்கு பதிவாகிறது. அதிகாரிகளிடம் முறையிட்டு கேட்ட பின் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளேன்’’ என நவாஸ்கனி தெரிவித்தார்.

முன்னதாக திமுக கூட்டணியில் விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ள திருமாவளவன், ‘’சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வருகின்றன’ எனக் குற்றம்சாட்டி இருந்தார். 

ஆனால், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், புதிய எந்திரம் ஒன்றையும் பொறுத்தி உள்ளது. வாக்களித்த சிறிது நேரத்தில் வாக்கு எந்திரத்துக்கு பக்கத்தில் ஒரு சிறிய கருப்பு எந்திரப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் விளக்கு எரிந்த பின் நாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த சின்னம் தோன்றுகிறது. அதை உறுதி செய்த பிறகு நாம் வெளியேறலாம். நாம் வாக்களித்த சின்னதிற்கு மாறாக வேறு சின்னம் வந்தால் அப்போதே தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்து வாக்குப்பதிவை நிறுத்தலாம். 

அவ்வாறு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து இருக்கும் நிலையில் திருமாவளவன் எந்தப்பட்டனை அழுத்தினாலும் அதிமுகவுக்கு செல்வதாக முரண்பட்ட கருத்தை கூறியிருக்கிறார்.