Asianet News TamilAsianet News Tamil

பிப்ரவரியில் வருகிறார் சின்னம்மா..??? பரபரக்கும் அரசியல் களம்..!!!

ஆனால் பாஜக அந்த கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது.  சசிகலா சிறை சென்று 2 வருடங்கள்  பதினோரு மாதங்கள் முடிந்துவிட்டன.  இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அவரின்  தண்டனையை நிறைவடைகிறது.  ஆனால் அதற்கு முன்பே  அவர் சிறையிலிருந்து வெளிவர வாய்ப்புள்ளது என்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

vk sasikala will  release by February cedars happy mode but ministers boiling
Author
Chennai, First Published Nov 10, 2019, 6:06 PM IST

சசிகலா சிறையில் இருந்து வெளிவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் படுஜோராக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது  குற்றவாளியான  சசிகலா 4 வருடம் சிறை தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை சென்றபோது சசிகலாவின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது சொந்த கட்சிக்காரர்களே கருதினர்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் தலைமையின் கீழ் இயங்கிவந்த அதிமுக, அவர் சிறை சென்ற உடன் இரண்டாக உடைந்தது.  எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றப் பின்னர்  அதிமுகவை, ஒ.பன்னீர் சொல்வத்துடன் இணைந்து  நடத்திவருகிறார்.

vk sasikala will  release by February cedars happy mode but ministers boiling

 மன்னார்குடி  குடும்பத்திற்கும் கட்சிக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர்கள்  வெளிப்படையாக பேசி வருகின்றனர்.  ஆனாலும்கூட அது வெறும் அரசியலுக்கானப் பேச்சுதான்,  சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அவர் தலைமையில் பழையபடி மீண்டும் அதிமுக  இணைந்துவிடும். என்று அதிமுகவில் உள்ள மற்றொரு சாரார் பேசி வருகின்றனர்.  இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலா நன்னடத்தை காரணமாக தண்டனை நிறைவு பெறுவதற்கு  முன்கூட்டியே,  அவர் விடுவிக்கபடலாம் என தகவல்கள் வெளியாகின.  அதற்கு பாஜக உடந்தையாக இருக்கிறது எனவும்  கூறப்பட்டது. ஆனால் பாஜக அந்த கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது.  சசிகலா சிறை சென்று 2 வருடங்கள்  பதினோரு மாதங்கள் முடிந்துவிட்டன.  இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அவரின்  தண்டனையை நிறைவடைகிறது.  ஆனால் அதற்கு முன்பே  அவர் சிறையிலிருந்து வெளிவர வாய்ப்புள்ளது என்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

vk sasikala will  release by February cedars happy mode but ministers boiling

வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி  சசிகலா  சிறையில் இருந்து வெளியே வருகிறார் என்றும்,  சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான வேலைகளில் பாஜக இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.  இத்தகவல் அமமுக நிர்வாகிகள் மத்தியில் உலாவருகிறது.  குறிப்பாக சுப்ரமணியசாமி சந்திரலேகா இந்த விஷயத்தை கையிலெடுத்திருப்பதாக  கூறப்படுகிறது.  பாஜக அதிமுகவை ஒருங்கிணைந்த அதிமுகவாக  உருவாக்குவது அல்லது.  அதிமுகவுக்கு இணையாக அமமுகவை வளர்ப்பதுதான் பாஜகவின் திட்டம் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றும்,  எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாத்துடுவோ.. என்கின்றனர் அதிமுக + அமமுகவினர்..

Follow Us:
Download App:
  • android
  • ios