இளவரசியின் மகனும், ஜெயா டிவி நிர்வாக இயக்குநருமான விவேக்ஜெயராமன் இன்று விக்டோரியா மருத்துவமனைக்கு இரத்ததானம் செய்து, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையாகி உள்ள சசிகலா கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவமனையிலிருந்து காரில் சென்ற சசிகலா, தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது பேசும் பொருளாகியுள்ளது.

Click and drag to move

இந்நிலையில் சசிகலாவுக்கு தேவையான உயர் சிகிச்சையை அளித்த விக்டோரியா மருத்துவமனைக்கு நன்றி செலுத்தும் விதமாக, இளவரசியின் மகனும், ஜெயா டிவி நிர்வாக இயக்குநருமான விவேக் ஜெயராமன் இன்று விக்டோரியா மருத்துவமனைக்கு இரத்ததானம் செய்து, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.