அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஆகியோர் இடையே நிலவி வந்த பனிப்போர் குடும்ப விழா ஒன்றில் முற்றுப் பெற்றுள்ளது. விவேக்கின் மனைவிக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியால் இரு குடும்பங்களும் மீண்டும் நெருங்கியுள்ளன.
கடந்த 20 ஆம்தேதிவிவேக்மனைவி கீர்த்தனாவுக்குவளைகாப்புநிகழ்ச்சி சென்னையில்தாஜ்கன்னிமராஹோட்டலில்நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை டிடிவிதினகரன் வீடுதேடிப்போய்விவேக் கொடுத்துள்ளார். . ஆனால்அன்று தினகரன்பரமக்குடி, ராமநாதபுரம்சுற்றுப்பயணத்தில்இருந்ததால்அவர்வளைகாப்புநிகழ்வில்பங்கேற்கவில்லை.

இதையடுத்து தினகரனின்மனைவிஅனுராதாவும், இளவரசியின்மகளும்விவேக்கின்சகோதரியுமானகிருஷ்ணப்பிரியாவும்தான்எல்லாவற்றையும்இழுத்துப்போட்டுக்கொண்டுசெய்தார்கள். கீர்த்தனாவுக்குஅலங்காரம்செய்வது, பூச்சூட்டுவது, சந்தனம்தடவுவதுஎன்றுவளைகாப்புநிகழ்ச்சியைமுன்னின்றுஅனுராதாவும், கிருஷ்ணப்பிரியாவும் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில்அரசியல் ரீதியாக தங்கதமிழ்செல்வன்மட்டும்தான்கலந்து கொண்டார். ஆனால் திவாகரன்குடும்பத்தினர் இந்நிகழ்வில்பங்கேற்கவில்லை .
விவேக்குக்கும்தினகரனுக்கும்இடையேஏற்பட்டிருந்தஇடைவெளியைஇளவரசிகடந்த மாதம் பரோலில்வந்தபோதுபேசிமுடித்துவிட்டதாகவும், அதில்இருந்தேஜெயாடிவியில்தினகரனுக்கானமுக்கியத்துவம்பழையபடிஅதிகரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விவேக்கின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி தினகரன் –விவேக் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது மட்டுமல்லாமல் நெருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
