vivek and mahadevan distribute money for vote
நடைபெற உள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முன்றாக பிளவுபட்ட அதிமுகவும், பலம்பொருந்திய எதிர்கட்சியின் திமுகவும் தமிழகத்தில் கால்பதிக்க துடிக்கும் பாஜகவும் களம் இறங்குகிறது. இவர்களுக்கு மத்தியில் சில அடிபொடிகளும் போட்டியிடுகின்றனர்.
பணபலம் , அதிகாரபலம் என அனைத்தும் பெற்றுள்ள இவர்களுடன் மோத விரும்பாத பாமக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டி களத்து பக்கமே செல்லாமல் சம்மர் லீவில் அமைதியாக உள்ளனர்.
இந்நிலையில் அர்கே நகரில் போட்டியிடும் கட்சியில் ஓட்டு வேட்டைக்கு வரிந்து கட்டி செயல்பட்டு வருகின்றனர். தமிழக மக்கள் கொளுத்தும் கோடை வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஆர் கே நகர் தொகுதி மக்கள் பண மழையில் நனைய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சசி கோஷ்டி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரன் தொகுதியில் சில நாட்களுக்கு முன்னரே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.
அவருடன் அக்கட்சியின் மகளிரணியினரும் உடன் வருகின்றனர். அவர்களுக்கு அன்றாடம் குவாட்டர் பாட்டில், பிரியாணி, தினப்படியும் தரப்படுவது வழக்கம்.
ஆனால் மகளிரணியினருக்கு நேரடியாக பணம் கொடுக்கப்பட வில்லையாம். ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் ஒரு டோக்கன் வழங்கப்படுகிறது.
பிரச்சாரம் முடிந்ததும் அதைப் பணமாக கிளைச்செயலாளர் கொடுத்து வருகிறார்களாம். இதற்காக வெளியூர்களில் இருந்து தொகுதிக்கு வந்துள்ள அ.தி.மு.க.வினருக்கு பொருப்புகள் தரப்படுவதால் அன்றாடம் ஒருவருக்கொருவர் முட்டல்-மோதல்கள் உருவாகிறதாம்.

வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வதற்காக அ.தி.மு.க. கட்சி நிதியிலிருந்து பெரும் தொகையை இளவரசி மகன் விவேக்கும் மகாதேவனும் நந்தனம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அனுப்பிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரவு வேளையில் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பணப் பெட்டிகள் ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள பெரிய வியாபார நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
வாக்காளர்களிடம் வழங்கப்படும் டோக்கன்கள் குறிப்பிட்ட கடைகளுக்கு எடுத்து சென்று கொடுத்தால் பொருட்களாகவோ, பணமாகவே வாங்கிக் கொள்ளலாமா?
முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் என்று கணக்கெடுக்கப்பட்டு ஆர்.கே. நகர் முழுவதும் 25-ம் தேதி வழங்கப்படிருப்பதாக தெரிகிறது.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல ஆயிரம் ருபாய் டோக்கன்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
