Asianet News TamilAsianet News Tamil

தொடைநடுங்கி_திமுக... பி.எஸ்பி.பி பள்ளி விவகாரத்தால் விஸ்வரூபம் எடுக்கும் விமர்சனம்..!

இந்த செயல்கள் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது இந்தக் கருத்திற்கு திமுக தரப்பில் இருந்து எந்த பதிலோ அல்லது ரியாக்ஷனோ கொடுக்கவில்லை.
 

Viswaroopam critique of PSBB school affair .
Author
Tamil Nadu, First Published May 31, 2021, 5:12 PM IST

பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் தொடை நடுங்கி திமுக என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒருமாதம் கூட ஆகாத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அரங்கேறிய சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில், தலைநகர் சென்னையின் கேகே நகரில் செயல்பட்டு வரும் பிரபல பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.Viswaroopam critique of PSBB school affair .

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளி ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாஜக பிரமுகர் சுப்ரமணியன் சுவாமி, பிஎஸ்பிபி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படாவிட்டால், ஆட்சியை கலைக்க நேரிடும் என்று பகீரங்கமாக, வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்திற்கு மத்திய படைகளை அனுப்ப வேண்டும் என்று மீண்டும் தமிழக அரசை சீண்டினார். அவரது இந்த செயல்கள் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது இந்தக் கருத்திற்கு திமுக தரப்பில் இருந்து எந்த பதிலோ அல்லது ரியாக்ஷனோ கொடுக்கவில்லை.

Viswaroopam critique of PSBB school affair .

இந்த நிலையில், சுப்ரமணிய சுவாமியை எதிர்த்து கேள்வி கேட்க திமுகவினருக்கு தைரியமில்லை எனக் கூறி, #தொடைநடுங்கி_திமுக என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.  மத்திய அரசிடம் இருந்து அதிகளவு தடுப்பூசிகளை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பெற்றுத்தர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரணியன் கோரிக்கை விடுத்தார். இதனை குறிப்பிட்டும், திமுக அரசினால் எதும் கையிலாகாத எனவும் விமர்சித்து வருகின்றனர்.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios