அதிமுக சார்பில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள நியூஸ் ஜெ புதிய தொலைக்காட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், வெறும் மாதச் சம்பளம் மட்டுமே வாங்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களால் எப்படி தொலைக்காட்சி தொடங்க முடிகிறது ? அதற்கு அவர்களுக்கு எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக செயல்பட்டு வந்த ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியது. இதே போல் நமது எம்.ஜிஆர் நாளிதழும் தினகரன் கைவசம் சென்றது. இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் அதிமுகவுக்கென நமது அம்மா என்ற நாளிதழ் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் அதிமுகவுக்கென புதிய தொலைக்காட்சி ஒன்றும் நிறுவப்பட்டது. இதன் ஒளிபரப்பு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் எம்.ஜி.ஆர்.. ஜெயலதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்பந்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அவர்கள் இருவரும் தொடங்கி வைத்தனர்.

.இந்தநிலையில்இந்தபுதியசேனல்குறித்துநடிகர்விஷால்தனதுடுவிட்டரில்பக்கத்தில்  'இன்றுமுதல்மற்றுமொருசெய்திசேனல்தொடங்கப்பட்டுள்ளது.அபாரம். ஒருசெய்திசேனல்ஆரம்பிக்கநிறையசெலவாகும்என்றுகேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்மாதசம்பளம்வாங்கும்எம்.எல்., எம்.பிக்கள்எப்படிஇதுபோன்றஒருவியாபாரஅமைப்பைதொடங்கமுடிகிறது? 2019-க்காககாத்திருக்கின்றேன்" என்றுமறைமுகமாகநியூஸ்ஜெதொலைக்காட்சியைதாக்கிவிமர்சனம்செய்துள்ளார்.

ஏற்கனவே 'சர்கார்' விவகாரத்தில்நடிகர்கள்மீதுகடுப்பில்அதிமுகஇருக்கும்நிலையில்விஷாலின்இந்தடுவிட்டர்பதிவுமேலும்ஆத்திரத்தைகிளப்பும்என எதிர்பார்க்கப்படுகிறது.