சசிகலா என்னும் சாதனை தமிழச்சியை நான் சந்திக்க வந்தேன் என இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

அரசியல் வெற்றிடத்தை சசிகா நிரப்புவார் என பாரதி ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் சசிகலா உடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சந்தித்து பேசினர். இதனையடுத்து சசிகலாவை பலரும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதி ராஜா, இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலரும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். 

அப்போது பேசிய பாரதிராஜா, சசிகலா என்னும் சாதனை தமிழச்சியை சந்திக்க வந்துள்ளே. தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை சசிகலா நிரப்ப வந்துள்ளார்’’ எனப்பேசினார். பலரும் சசிகலாவை சந்திக்க வருவது அதிமுக நிர்வாகிகளை கலக்கமடையச் செய்துள்ளது.