திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று மணி கணக்காக, நாள் கணக்காக வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். 

ஆனால் பணம் படைத்த சிலர் ஒரு சில கணிசமான தொகையை செலுத்தி விஐபி பாஸ் என்ற பெயரில் குறுக்கு வழியில் எளிதாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். 

சாமி கும்பிடுவதில் கூட ஏழைக்கு ஒரு சலுகை, பணமிருப்பவருக்கு ஒரு சலுகையா என பொதுமக்கள் இதனால் குறைப்பட்டு கொள்கிறார்கள். மேலும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் உறவினர்கள் என பலர் இந்த விஐபி பாஸை தங்கள் சுய தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதை கவனத்தில் கொண்டு விஐபி பாஸ் என்ற முறையை இஷ்டத்துக்கு பயன்படுத்த முடியாதவாறு அதை ரத்து செய்துவிட்டு புதிய முறையை அறிவித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம். 

இதில் விஐபி அனுமதியை L1, L2, L3 என பிரித்திருக்கிறார்கள். அதன்படி..

L1 – நீதிபதிகள், மத்திய உயர்குழு உறுப்பினர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள்

L2 – திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் குடும்பம், மற்றும் அரசு அதிகாரிகள்

L3 – அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சிபாரிசு கடிதம் பெற்றவர்கள்

என்று மூன்று வகையான பிரிவில் மட்டும் அனுமதி வழங்கப்படும். ஒரு அனுமதி சீட்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாமர பொதும்க்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.