Asianet News TamilAsianet News Tamil

தீய சக்திகள் தூண்டுதலே வன்முறைக்கு காரணம்!! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை யில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தசம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டணம் தெரிவித்து வருகிறார்கள். சட்டசபையில் முதல்வர் பேசும் போது,' சிலர் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் பேசியிருகிறார்.
 
Violent forces are the cause of violence !! Chief Minister Edappadi Palanisamy is a sensational allegation.
Author
Tamilnádu, First Published Feb 18, 2020, 8:41 AM IST

T.Balamurukan

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை யில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தசம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டணம் தெரிவித்து வருகிறார்கள். சட்டசபையில் முதல்வர் பேசும் போது,' சிலர் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் பேசியிருகிறார்.

Violent forces are the cause of violence !! Chief Minister Edappadi Palanisamy is a sensational allegation.

 தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி பேசினார்கள்.

Violent forces are the cause of violence !! Chief Minister Edappadi Palanisamy is a sensational allegation.

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..,'
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடும் என்று தகவல் கிடைத்தது. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 13 பள்ளிவாசல்களின் சார்பாக, அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகளை அழைத்து இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் தலைமையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இதற்கு முன்பு பல்வேறு இடங்களிலேயே ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது. காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் முழு பாதுகாப்பு அளித்தார்கள். 

Violent forces are the cause of violence !! Chief Minister Edappadi Palanisamy is a sensational allegation.
இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இன்றைக்கு அந்த ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்துமே நடைபெற்று முடிந்திருக்கின்றன. ஆனால் வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் கிடைத்திருக்கின்றது. பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறம் தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிறுபான்மையின சகோதர ,சகோதரிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் இந்த அரசு அனுமதிக்காது. இந்த அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios